என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தூதனூர் கிராம நிர்வாக அலுவலக முன்பு காலிகுடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
  X
  தூதனூர் கிராம நிர்வாக அலுவலக முன்பு காலிகுடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

  குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
  காகாபாளையம்:

  சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு தூதனூர் பகுதியில் ஒரு மாதமாக  சீரான குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என தெரிகிறது. 

  இதனால் அப்பகுதி பெண்கள், பெரியவர்கள், மாணவ- மாணவிகள் சிராமத்திற்குள்ளாகி உள்ளனர். இது பற்றி அப்பகுதி பெண்கள்,  தங்கள்  பகுதிக்கு உட்பட்ட இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலரிடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் அவர் அதனை  கண்டுகொள்ளவில்லை. 

  மேலும் குடிநீர் வழங்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை   என்று கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரம் அடைந்த தூதனூர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் இடங்கணை சாலை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

  ெதாடர்ந்து அவர்களிடம்  நகராட்சி அதிகாரிகள், மகுடஞ்சாவடி போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  Next Story
  ×