search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 13 சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் விரைவில் இயக்க திட்டம்

    சென்னைக்கு 6 ரெயில்களும், கோவைக்கு 3 ரெயில்களும், திருச்சி, திருவனந்தபுரத்திற்கு தலா 2 ரெயில்களும் என மொத்தம் 13 ரெயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வட மாநிலங்களில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயலில் பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகள் இடம் பெறுகின்றன. முக்கியமான நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

    13 சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரெயில்வே வாரியம் இதனை ஒதுக்கி செயல்படுத்த அறிவுறுத்தி உள்ளது.

    சென்னைக்கு 6 ரெயில்களும், கோவைக்கு 3 ரெயில்களும், திருச்சி, திருவனந்தபுரத்திற்கு தலா 2 ரெயில்களும் என மொத்தம் 13 ரெயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் தென் மாநில தலைநகரங்களை மையமாக கொண்டு இயக்கப்பட உள்ளது. பிரிமியம், சதாப்தி, ராஜ்தானி, தூரந்தோ ரெயில்கள் புதுப்பிக்கப்படுகின்றன. 13 ரெயில்களுக்கான பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, “13 புதிய ரெயில்களுக்கான பெட்டிகள் வந்துள்ளன. அதனை எப்போது இயக்க வேண்டும் என்ற தகவல் இன்னும் ரெயில்வே வாரியத்திடம் இருந்து வரவில்லை.

    சென்னையில் இருந்து எந்தெந்த நகரங்களுக்கு இயக்கப்படும் என்ற தகவல் உறுதியானவுடன் தெரிவிக்கப்படும்” என்றனர்.

    Next Story
    ×