என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தவர்களை படத்தில் காணலாம்.
  X
  வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தவர்களை படத்தில் காணலாம்.

  நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திரண்ட மக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
  நெல்லை:

  அகில பாரத இந்து மகாசபையின் மாநிலத் துணைத் தலைவர் கணேசன் தலைமையில் சுத்தமல்லி, டவுன் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு அளித்தனர்.

  அதில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் சுத்தமல்லி விசுவநாதன் நகர், பாளை, வண்ணார்பேட்டை சிவாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிகவும் ஏழ்மை நிலையில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்து இருந்தோம்.ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட–வில்லை. 

  இன்று கிராம மக்களை ஒன்று திரட்டி வந்து மனு கொடுத்துள்ளோம்.கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

  இதனை ஆய்வு செய்த கலெக்டர் விஷ்ணு, உடனடியாக தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் அனைவருக்கும் இலவச வீட்டினை ஜெபா கார்டன் பகுதியில் வழங்குமாறு அறிவுறுத்தினார்.

  ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் பாளை சாந்தி நகர் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் குடியிருப்பு உள்ளது. 

  இங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். தற்போது அதனை இடித்துவிட்டு 420 குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

  ஆனால் மீதமுள்ள 200 குடியிருப்பு வாசிகளுக்கு வீடுகள் இல்லை. தற்போது வீடு கட்ட உள்ளதால் நாங்கள் வாடகை வீட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே இந்த குடியிருப்பின் பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக குடியிருப்பு அமைத்து தர வேண்டும். 

  மேலும் நிவாரண தொகையாக ரூ.24 ஆயிரம் வழங்க வேண்டும்.  குடியிருப்பு இல்லாத மேலும் 200 குடும்பங்களுக்கு சேர்த்து குடியிருப்பு கட்டிக் கொடுக்க

  நெல்லை மாநகராட்சி 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் டாக்டர் சங்கர், ஊர் தலைவர் மாரிமுத்து ஆகியோர் தலைமையில் உலகம்மன் கோவில் அருந்ததியர் குடியிருப்பு மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

  தச்சநல்லூர் 13-வது வார்டுக்கு உட்பட்ட உலகம்மன் கோவில் பொட்டல் பகுதியில் சுமார் 360 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

   இங்கு உள்ள குழந்தைகள் பள்ளி செல்வதற்கும், வயதானவர்கள் கடை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் போதும் நெல்லை- மதுரை பைபாஸ் சாலையை கடந்து தான் செல்ல வேண்டி உள்ளது. இந்த சாலை மிகுந்த போக்குவரத்து நெருக்கடி கொண்டதாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது.

   தற்போது உலகம்மன் கோவில் தெரு பகுதியில் நெல்லை-மதுரை பைபாஸ் சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கி இருக்கிறது. அங்கு சுரங்கப்பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

  Next Story
  ×