என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெண் தற்கொலை
  X
  பெண் தற்கொலை

  காதல் திருமணம் செய்த பெண் கடலில் குதித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவான்மியூர் காதல் திருமணம் செய்த பட்டாதாரி பெண் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவான்மியூர்:

  கொட்டிவாக்கம் கடற்கரையில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் கரை ஒதுங்கியது.

  இதுபற்றி தகவல் கிடைத்ததும் நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

  அப்போது உயிரிழந்த இளம்பெண் யார்? என்பது தெரிய வந்தது. நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுவாதி (24) என்ற பெண் நேற்று முன்தினம் மாயமாகி உள்ளார். இதுபற்றி அங்குள்ள போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது.

  இந்த நிலையில்தான் சுவாதியின் உடல் கரை ஒதுங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

  பட்டதாரி பெண்ணான சுவாதி காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாகவும், பின்னர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

  சுவாதியின் மரணத்தில் சந்தேகம் ஏதும் உள்ளதா? என்று போலீசாரிடம் கேட்டதற்கு அதுபோல எதுவும் இல்லை என்று கூறினார்கள்.
  Next Story
  ×