என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
இருசக்கர வாகனத்தின் மீது பஸ் மோதி பெண் பலி
இருசக்கர வாகனத்தின் மீது பஸ் மோதியதில் பெண் பலியானார்
கரூர்:
கரூர் தெற்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது41). டெக்ஸ்டைல் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூரை சேர்ந்த கஸ்தூரி (வயது 38) என்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் சென்ற அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த கஸ்தூரி சாலையில் விழுந்தார்.
அப்போது அவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கரூர் நகர டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story