search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடியில் பள்ளிச்செல்லா இடைநின்ற குழந்தைகள் குறித்து கள ஆய்வு செய்த குழுவினர்.
    X
    வாழப்பாடியில் பள்ளிச்செல்லா இடைநின்ற குழந்தைகள் குறித்து கள ஆய்வு செய்த குழுவினர்.

    பள்ளிச் செல்லா குழந்தைகள் குறித்து கள ஆய்வு

    பள்ளிச் செல்லா குழந்தைகள் குறித்து கள ஆய்வு நடைபெற்றது.
    வாழப்பாடி,

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், பள்ளிச் செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்த களஆய்வு மற்றும் கணக்கெடுப்பு நடைபெற்றது.

    கொரோனா தொற்று பரவல் பொதுமுடக்கத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், பள்ளிச்செல்லாத மற்றும் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

     எனவே அனைத்து பகுதிகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு களஆய்வு மற்றும் கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்ப்பதற்குரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வாழப்பாடி பேரூராட்சி அம்பேத்கர் நகர், இந்திராநகர், கல்கொத்தி தெரு உள்ளிட்ட பகுதியில், பள்ளிச்செல்லா குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ், சசிகலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சசிகலா, புறதொடர்பு பணியாளர் பரமேஸ்வரி, சமூக பணியாளர் ஜெயஷீலா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் திலகவதி, புதுப்பாளையம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ரேணுகாதேவி மற்றும் ஆசிரிய பயிற்றுநர், சிறப்பாசிரியர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 21 பள்ளிச்செல்லா குழந்தைகளை கண்டறிந்து, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனைகள் வழங்கிய இக்குழுவினர், இந்த குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப அறிவுறுத்தி, உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.

    Next Story
    ×