search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரியில் வளாக தூய்மை பணி நடைபெற்ற போது எடுத்தப்படம்.
    X
    கல்லூரியில் வளாக தூய்மை பணி நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாக தூய்மை பணி

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் வளாக தூய்மை பணி நடைபெற்றது.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயங்கிவரும் நாட்டு நலப்பணித்திட்டம் (அணி எண் 231 சுயநிதிப்பிரிவு) மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தூய்மை இந்தியா திட்டம் சார்பில் ஒருநாள் வளாக தூய்மை பணி சுயநிதிப்பிரிவு வளாகத்தில் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் மகேந்திரன் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தினை எவ்வாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், தங்களை சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும், வீட்டையும் தூய்மையாக வைத்திருப்பதே நமது கடமை என எடுத்துரைத்தார். நாட்டு நலப்பணித்திட்டம் சுயநிதிப்பிரிவு அணி எண் 231 திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்றார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் இன்றைய காலக்கட்டத்தில் சுற்றுப்புற தூய்மையை பற்றியும் நோய் பரவுவதை தடுப்பது பற்றியும் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியின் முடிவில் சுயநிதிப்பிரிவு இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி பார்வதிதேவி நன்றி  கூறினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டு கல்லூரியின் சுயநிதிப்பிரிவு வளாகத்தில் தூய்மை பணியினை மேற்கொண்டனர்.

    சுயநிதிப்பிரிவு பேராசிரியர்களான சிங்காரவேலு, சிரில் அருண், கரோலின் கண்மணி ஆனந்தி, திருச்செல்வன், ரூபன் சேசு அடைக்கலம், செந்தில்குமாரி, ஸ்வீட்லின் டயானா, அண்டனி பிரைட் ராஜா, கவிதா, ராஜபூபதி, ஜெயந்தி, பென்னட், ஆய்வக உதவியாளர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×