search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    சாய கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் தேங்கி கிடக்கும் 45 ஆயிரம் டன் கழிவு உப்புக்கள்- அகற்ற முடியாமல் தவிக்கும் ஆலை உரிமையாளர்கள்

    சுத்திகரிப்பின் இறுதி நிலையில், உப்பு பிரித்தெடுக்கப்படுகிறது. நல்ல உப்புகள் சாயமேற்றுதலுக்காக மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
    திருப்பூர்:

    பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூரில் 18 சாயக்கழிவுநீர் பொது சுத்தி கரிப்பு மையங்கள் இயங்குகின்றன. 326 ஆலைகளில் இருந்து  சாயக்கழிவுநீர் பெறப்பட்டு இம்மையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது.

    இதுதவிர, 100 தனியார் சாய ஆலைகளுடன் கூடிய சுத்திகரிப்பு மையங்களும் உள்ளன.சாயக்கழிவுநீர், உயிரியல், வேதியியல், சவ்வூடு பரவல் ஆகிய 3  நிலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது.

    சாயக்கழிவு நீரின் கடினத்தன்மையை நீக்குவதற்காக, கால்சியம் ஹைட்ராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. சுத்திகரிப்பின்போது பெறப்படும் திடக்கழிவு, சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. உயிரியல் கழிவுகள், பாய்லர் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

    சுத்திகரிப்பின் இறுதி நிலையில், உப்பு பிரித்தெடுக்கப்படுகிறது. நல்ல உப்புகள் சாயமேற்றுதலுக்காக மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. கழிவு உப்புகளை அகற்றுவதற்கான வழிகள் கண்டறியப்படவில்லை. இதனால் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள்க ழிவு உப்புக்களை வளாகத்திலேயே குடோன்கள் அமைத்து பாதுகாத்து வருகின்றன.

    மாசுகட்டுப்பாடு வாரிய பதிவுப்படி திருப்பூர் சுத்திகரிப்பு மையங்களில்  மொத்தம் 45 ஆயிரம் டன் கழிவு உப்பு தேங்கியுள்ளது. இதுகுறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க பொருளாளர் மாதேஸ்வரன் கூறியதாவது:-

    சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில் 90 சதவீதம் நன்னீராக பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. 4 சதவீதம் அடர் உப்பு  மூலம் ஒன்றரை லட்சம் டி.டி.எஸ்., கலந்த பிரெய்ன் சொல்யூஷன் கிடைக்கிறது. இது சாயமேற்றுதலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    சுத்திகரிப்பின் கடைசியில் எவாபரேட்டரிலிருந்து நல்ல உப்பு மற்றும் பயன்படுத்த முடியாத கழிவு உப்பு கிடைக்கிறது. மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்படி, கழிவு உப்புகளை ஒவ்வொரு சுத்திகரிப்பு மையமும், சேமித்துவருகின்றன.

    இந்த உப்புகளை சேமிப்பது சவாலானது.மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது கழிவு உப்புகள் கரைந்துபோகாமல் பாதுகாக்கவேண்டும். தகர மேற்கூரையுடன் கூடிய குடோன்களில் சிமென்ட் தளம் அமைத்து, தார்பாய் விரித்து அதன்மீது கழிவு உப்பை கொட்டி பாதுகாக்கிறோம்.

    உப்பின் வீரியத்தால்  மேற்கூரைகள் வெகு விரைவிலேயே சிதிலமடைந்துவிடுகின்றன. சேமிப்பு குடோன்களை பராமரிக்க, புதுப்பிக்க அதிக தொகை செலவிடவேண்டியுள்ளது.

    கழிவு உப்பில் சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட் அதிக அளவிலும் சிறிதளவு இதர உப்பு கலவைகள் உள்ளன. கழிவு உப்புகளை அகற்ற பலவித முயற்சிகள் மேற்கொண்டும்  வெற்றி பெறமுடியவில்லை. அதிக தொகை செலவிடவேண்டியுள்ளதால் உப்பு கலவையை பிரித்தெடுப்பதும் சாத்தியமில்லாததாகி விட்டது.

    சுத்திகரிப்பில் பிரித்தெடுக்கப்படும் கழிவு உப்புக்களை அப்புறப்படுத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராயவேண்டும் என அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகிறோம்.

    இந்நிலையில்  கழிவு உப்பு அகற்றுவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்கிற தமிழக ஜவுளி அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.திருப்பூரில், ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்வெ ற்றிகரமாக நடந்துவருகிறது.

    கழிவு உப்புகளை அப்புறப்படுத்தும் வழிகள் கண்டறியப்பட்டால் ஜீரோ சாலிட் டிஸ்சார்ஜ் நிலையையும் அடைந்துவிடுவோம். இதன்மூலம் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு முழுமை பெற்றுவிடும்.இவ்வாறு  அவர் கூறினார்.
    Next Story
    ×