என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  டாஸ்மாக்
  X
  டாஸ்மாக்

  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மது விற்பனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை என்பதால் நேற்றே தமிழகத்தில் அதிகளவு மது விற்பனையாகியுள்ளது.
  சென்னை,:

  தமிழகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றே மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் அதிக அளவில் கூடினர். மதுபான கடைகளில் இருந்து மதுப்பிரியர்கள் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

  கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்த மது பிரியர்கள் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி பைகளில் எடுத்துச் சென்றனர்.

  இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

  இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடிக்கும், அடுத்து சென்னை மண்டலத்தில் ரூ. 52.28 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

  திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 48.67 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

  Next Story
  ×