என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அமைச்சர் தங்கம் தென்னரசு
  X
  அமைச்சர் தங்கம் தென்னரசு

  நிசான் தொழிற்சாலை மூடப்படும் சூழல் உருவாகிடக் கூடும் என்ற கூற்று முற்றிலும் கற்பனையானது - அமைச்சர் தங்கம் தென்னரசு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிசான் தொழிற்சாலை மூடப்படும் என்ற அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரின் கூற்றுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
  சென்னை:

  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஜப்பான் நாட்டின் நிசான் மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமான நிசான் மோட்டார் இந்தியா தொழிற்சாலை மூடப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்தப் பிரச்சினையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி நிசான் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

  இந்நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் கூறுகையில், நிசான் தொழிற்சாலை மூடப்படும் சூழல் உருவாகிடக் கூடும் என்ற கூற்று முற்றிலும் கற்பனையானது. தொழிற்சாலை தொடர்ந்து இயங்கும் சூழலில் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் எனக் கூறுவது உண்மைக்கு மாறானது.

  அ.தி.மு.க. ஆட்சியில்தான் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டு பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×