search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோதல் நடந்த பள்ளி,  விஜயகாந்த்
    X
    மோதல் நடந்த பள்ளி, விஜயகாந்த்

    சாதிக்காக பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டது அபாயகரமானது- விஜயகாந்த் கருத்து

    பள்ளி மாணவன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நெல்லை மாவட்டம்  முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் பிளஸ்2 மாணவர் செல்வ சூர்யாவுக்கும் 11ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. 

    வாக்குவாதம் முற்றிய நிலையில் செல்வ சூர்யாவை எதிர்தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் கற்களால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செல்வ சூர்யா, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். 

    மாணவர் கையில் சாதியை குறிக்கும் கயிறு கட்டி இருப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்த சம்பவத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிப் பருவத்திலேயே சாதிக்காக சக மாணவனை தாக்குவது அபாயகரமானது என்று கூறியுள்ளார்.  சாதிக்காக மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×