என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  கடையில் குட்கா விற்பனை-2 பெண்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேர்ந்தமரம் பகுதியில் கடையில் பதுக்கி வைத்து குட்கா, மதுபாட்டில் விற்பனை செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
  நெல்லை:

  சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வென்றிலிங்கபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 51). இவர் குட்காவை மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்வதாக சேர்ந்தமரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மாரியப்பனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

  அப்போது அதில் குட்கா இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் நடுவக்குறிச்சியில் ஒரு பெட்டிக்கடைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் 32 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 84 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெட்டிக்கடை உரிமையாளர் மகேஷ்வரி, மாரியப்பன் ஆகியோரை கைது செய்தனர்.
  Next Story
  ×