என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
  X
  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மல்லிப்பட்டினத்தில் இப்தார் நோன்பு திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  மதுக்கூர்:

  தமிழகம் முழுவதும் ரம்ஜானை முன்னிட்டு மத நல்லிணக்க அடிப்படையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

  இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் நாகூர் கனி தலைமையில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. 

  இதற்கு பேராவூரணி முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம் முன்னிலை வகித்தார். இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ என பல்வேறு கட்சி நிர்வாகிகள் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

  இதில் கேத்தரின் மெட்ரிகுலேஷன் பள்ளி அருட் நிர்வாக சகோதரிகள் மற்றும் ஏனைய காங்கிரஸ் பொறுப்பாளர்களும் சர்வ கட்சியினர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

  இந்த இப்தார் நிகழ்ச்சி என்பது சமூக நல்லிணக்கத்தை ஒற்றுமை படுத்தக்கூடிய நிகழ்ச்சியாக அமைந்தது.
  Next Story
  ×