search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.60 ஆக உயர்வு

    சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி விலை அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்த மாத தொடக்கத்தில் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ10க்கு விற்பனை செய்யப்பட்டது விலை கடும் வீழ்ச்சி அடைந்த போதிலும் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வீணாகும் தக்காளியை மொத்த வியாபாரிகள் குப்பையில் கொட்டி வந்தனர்.

    கடந்த வாரம் முதல் தக்காளி வரத்து திடீரென குறைய தொடங்கியதால் விலையும் அதிகரிக்க தொடங்கியது.

    5நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.39க்கும் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கும் விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தக்காளி விலை மேலும் அதிகரித்து உள்ளது இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.47க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.60க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.70வரையிலும் விற்கப்படுகிறது. தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி விலை அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:

    கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வழக்கமாக தினசரி 65 முதல் 70 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம் ஆனால் கடந்த சில நாட்களாக அதன் வரத்து குறைந்து வருவதால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 42 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு பெட்டி தக்காளி (14கிலோ) ரூ.110க்கு விற்ற நிலையில் தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ.650க்கு விற்கப்படுகிறது.

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக அங்கு தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தற்போது தக்காளியை அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இதன் காரணமாகவே தக்காளி தேவை அதிகரித்து கோயம்பேடு சந்தைக்கு வரும் வரத்து குறைந்து வருகிறது. வரத்து அதிகரித்தால் மட்டுமே தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் 25,555 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம், தென்னை உள்ளிட்டவை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது.

    தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி அறுவடை குறைந்ததால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது.

    தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வருகிற நாட்களில் மேலும் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×