என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் ரூ.2.5 லட்சம் நகை, பணம் கொள்ளை
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் அருகே உள்ள டி.இடையார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மகன் பெங்களூரில் வசித்து வருகிறார். அங்கு தற்போது சொந்தமாக வீடு ஒன்றை கட்டிக்கொண்டு இருக்கிறார்.
இந்த வீட்டின் பணிகளை பார்த்துக்கொள்வதற்காக தந்தை முருகனை பெங்களூருக்கு வருமாறு அழைத்தார். அதன்படி கடந்த 1 வாரத்துக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் முருகன் பெங்களூருக்கு சென்றுவிட்டார்.
முருகனின் வீடு 1 வாரமாக பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு முருகன் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம், 4 பவுன் தங்கநகைகளை திருடிசென்றுவிட்டனர்.
முருகனின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து முருகனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அவர் தனது மனைவியுடன் பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் முருகன் புகார் செய்தார். போலீசார் நேரில்வந்து முருகன் வீட்டில் ஆய்வு செய்து கைரேகைகளை பதிவு செய்தனர். அக்கம்பக்கம் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தினர். விவசாயி வீட்டில் திருடுபோன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.