search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
    X
    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

    கோவை மாவட்டத்தில் நெல் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும்

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    கோவை:  

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.
     
    கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியதாவது:-கோவை பூலுவப்பட்டி, சூலூர், மதுக்கரை பொள்ளா ச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் முதன்மை பதப்படுத்தும் காய்கறி மையங்கள் கட்டப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்து உள்ளது. 
     
    இதுவரை விவசா யிகளின் பயன்பாட்டிற்கு இந்த மையங்கள் வரவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கும் செயலாகும். இந்த மையங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் அதிகப்படியான காய்கறிகள் உற்பத்தி செய்யப்படும் என்பதால் அனைத்து வகை காய்கறிகளும் கமிஷன் மண்டி, உள்ளுர் சந்தைகள் மற்றும் வெளி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். 
    இந்த மையங்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக வந்தால் விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக அமையும்.
     
    கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டது.   தற்போது இந்த தடுப்பணைகளில் முட்புதர்கள் முளைத்து அடர்த்தியாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வரும் மழை நீர் தேக்க முடியாமல் போய்விடும் சூழ்நிலை உள்ளது. எனவே தடுப்பணைகளை உடனடியாக தூர்வார வேண்டும்.

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான நல்லூர் வயல், செம்மேடு, இக்கரை பூலுவம்பட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் அரசு அறிமுகப்படுத்தும் புதிய வகை நெல்களையும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நெல் சாகுபடியை அரசு ஊக்குவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    விவசாயிகள் சங்கம்  மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி பேசுகையில், கோவை மாவட்டம் சூலூர், சோமனூர், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் விசைத்தறி கூடங்கள், பஞ்சாலைகள், விவசாய நிலங்களில் உற்பத்தியாகும் கால்நடை தீவனம் வைக்கப்படும் கிடங்கு போன்ற பல மையங்கள் உள்ளது. எனவே இந்த இடங்களை மையப்படுத்தி தீயணைப்பு நிலையம் ஒன்று அமைக்க வேண்டும் என்றார். 

    இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் சமீரன் விவசாயிகள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
    Next Story
    ×