என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பொள்ளாச்சியில் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது
Byமாலை மலர்29 April 2022 2:56 PM IST (Updated: 29 April 2022 2:56 PM IST)
மோட்டார் சைக்கிளில் 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குழியில் உள்ள அரசு பள்ளி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பொ ள்ளாச்சி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் இள வேந்தன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த்குமார் நாத் (வயது 36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 கிேலா கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கே.ஜி.சாவடி அருகே உள்ள திருமலையாம் பாளையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் கஞ்சாவை கடத்தி வந்த மதுக்கரை சேர்ந்த பிரபாகரன் (26), சீராபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் (25) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×