என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  குன்றத்தூரில் 8ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குன்றத்தூரில் தாய் கண்டித்ததால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  பூந்தமல்லி:

  குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மிழ்ச்செல்வன். இவரது மகள் தனிஷா (வயது13). பூந்தண்டலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

  நேற்று மாலை பள்ளி முடிந்து விட்டுக்கு மாணவி தனிஷா வந்தார். அப்போது தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதாக தாய் சுபாஷினி கண்டித்தார்.

  இதனால் மனமுடைந்த மாணவி தனிஷா வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டு உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவர் அலறி துடித்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கழிவறையின் கதவை உடைத்து தனிஷாவை மீட்டனர். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  தாய் கண்டித்ததால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×