என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நில பிரச்சினை காரணமாக விஷம் குடித்த போலீஸ்காரர்- ஆஸ்பத்திரியில் அனுமதி
Byமாலை மலர்29 April 2022 10:34 AM IST (Updated: 29 April 2022 10:34 AM IST)
மேட்டூர் அருகே நில பிரச்சினை காரணமாக விஷம் குடித்த போலீஸ்காரர் ஓமலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 31). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், அவரது உறவினருக்கும் இடையே நில பிரச்சினை இருந்துள்ளது. இதனால் மோகன்குமார் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிக்கு சென்ற மோகன்குமார் வேலை விஷயமாக மோட்டார்சைக்கிளில் சின்னமேட்டூருக்கு சென்றார். அங்கு வைத்து அவர் திடீரென விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மோகன்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×