என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
திருப்பூர் பாலா மருத்துவமனை சார்பில் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது
எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., பிசியோ தெரபி சிகிச்சைகள் 50 சதவீதம் தள்ளுபடி கட்டணத்தில் செய்யப்படும்.
திருப்பூர்:
மே1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் பாலா எலும்பு மருத்துவமனை நடத்தும் இலவச திருப்பூர் தொழிலாளர்கள் மருத்துவ முகாம் வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி எதிரில் பாரத் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள பாலா எலும்பு மருத்துவமனையில் நடக்கிறது.
முகாமின் சிறப்பம்சங்களாக திருப்பூர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நாள்பட்ட முதுகுவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முழங்கால் வலி, குதிங்கால் வலி மற்றும் நரம்பு சுருட்டு (வெரிகோஸ் வெய்ன்) போன்றவைகளுக்கு இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படும்.
வலி வருவதை தடுக்கும் தினசரி உடற்பயிற்சி முறைகள் கற்று தரப்படும். தேவைப்படும் நபர்களுக்கு ரூ.1500 மதிப்புள்ள எலும்பு வலிமை தன்மை பரிசோதனை இலவசமாக செய்யப்படும்.
தேவையான நபர்களுக்கு எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., பிசியோ தெரபி சிகிச்சைகள் 50 சதவீதம் தள்ளுபடி கட்டணத்தில் செய்யப்படும்.
மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, முழங்கால் மற்றும் தோள்பட்டை நுண்துளை அறுவை சிகிச்சை, முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை போன்றவை தமிழக அரசின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்படும். முன்பதிவு அவசியம் என பாலா மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story