என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அரசு பஸ் கண்டருக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வள்ளி அறிவுரை வழங்கிய காட்சி.
  X
  அரசு பஸ் கண்டருக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வள்ளி அறிவுரை வழங்கிய காட்சி.

  பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்தால் நடவடிக்கை-டிரைவர், கண்டக்டர்களுக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்தால் நடவடிக்கை- எடுக்கப்படும் என டிரைவர், கண்டக்டர்களுக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  சிங்கை:

  பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் டிரைவர் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே போக்குவரத்துத் துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாணவர்களுக்கும் அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் அம்பை  வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வள்ளி இப்பகுதிகளில் சாலைகளில் செல்லும் வாகனங்களை அடிக்கடி ஆய்வு செய்வது வருகிறார்.
  இதுபோன்று அம்பை பகுதியில் ஒரு அரசுப் பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்தார்.
  மேலும் அவர் டிரைவர், கண்டர்களிடம் கூறியதாவது:-

  பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்துகளை கட்டாயம் நிறுத்தி அனைவரையும் ஏற்றிச் செல்ல வேண்டும். பயணிகள் ஏறுவதற்கு ஏதுவாக வழி ஏற்படுத்தி கொடுத்த பின், அனைவரும் ஏறிய பின்னரே பஸ்சை இயக்க வேண்டும்.

  மேலும், வழக்கத்தைவிட பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு ஏதுவாக உடனடியாக மேலாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்ய மாணவர்களை அனுமதிக்க வேண்டாம். ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகளிடம் தகராறு செய்யும் மாணவர்கள் குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கலாம்.

  படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்து குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.  அக்கூட்டத்திற்கு மாணவர்களின் பெற்றோர்களையும் அழைக்க வேண்டும்.

  படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் சென்றால் ஓட்டுநர், நடத்துநர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரிக்கை செய்தார்.
  Next Story
  ×