என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சென்னை ஐகோர்ட்
  X
  சென்னை ஐகோர்ட்

  சட்டவிரோத பேனர்களை அகற்றும் செலவை வைத்தவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்- ஐகோர்ட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சட்டவிரோத பேனர்களை வைத்தவர்களிடமே, அதை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
  சென்னை:

  புதுச்சேரியில் உள்ள கரிக்கலாம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகனாதன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 24ந்தேதி புதுச்சேரிக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான பேனர்கள் சட்டவிரோதமாக நகரம் முழுவதும் வைக்கப்பட்டது.

  சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக வைக்கப்பட்ட சட்ட விரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்று ஏற்கனவே நகராட்சியிடம் அளிக்கப்பட்ட புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

  இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் ஞானசேகரன் ஆஜராகி, புதுச்சேரியில் பேனர் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.

  புதுச்சேரி நகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல் சட்டவிரோத பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை வைத்தவர்களிடமே, அதை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.


  Next Story
  ×