search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெற்றி கோப்பையை கனிமொழி எம்.பி வழங்கிய போது எடுத்தபடம். அருகில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்
    X
    வெற்றி கோப்பையை கனிமொழி எம்.பி வழங்கிய போது எடுத்தபடம். அருகில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்

    கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு- கனிமொழி எம்.பி. வழங்கினார்

    உடன்குடியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கனிமொழி எம்.பி. பரிசு வழங்கினார்.
    உடன்குடி:

    தி.மு.க., தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டிகள் உடன்குடி சிவலூர் இ.பி., மைதானத்தில் 6 நாட்கள் நடந்தது. இதில் 120 அணிகள் கலந்து கொண்டது.

    அனைத்து அணிகளுக்கும் தலா 2 பேட், வீரர்கள் அனைவருக்கும் பேண்ட், 
    டி சர்ட் ஆகியவற்றை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன் அனந்த மகேஸ்வரன் வழங்கி போட்டியை தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. 

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். போட்டி ஒருங்கிணைப்பாளரும், செட்டியா பத்து ஊராட்சி மன்றதலைவருமான பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். 

    அனந்த மகேஸ்வரன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸ்ப், உடன்குடி பேருராட்சி துணைத் தலைவர் மால் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    போட்டியில் முதலிடம் பெற்ற உடன்குடி ராக்கர்ஸ் அணிக்கு ரொக்கப்பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பிடித்த கொட்டங்காடு அணிக்கு ரூ.40 ஆயிரம், 3-ம் இடம் பிடித்த கே.எம்.எஸ் அணிக்கு ரூ.30 ஆயிரம், 4-ம் இடம் பிடித்த உடன்குடி புதுமனை அணிக்கு ரொக்கப்பரிசு ரூ.20 ஆயிரம், மற்றும் வெற்றி கோப்பைகளையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    போட்டியில் சிறந்த பேட்ஸ்மேனாக அஸ்வின், சிறந்த பந்து வீச்சாளராக பரத், ஆல்ரவுண்டராக வேல் மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கினர்.
    Next Story
    ×