search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல தி.மு.க. நாடகமாடுகிறது- டி.டி.வி.தினகரன் கண்டனம்

    அன்றைய காலகட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருந்த தி.மு.க. தற்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பது போல நாடகம் ஆடி வருகிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
    பெரம்பூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசும்போது, “2003-ம் ஆண்டு மத்தியில் ஆண்ட வாஜ்பாய் அரசு சிறுபான்மையினருக்கு எதிராக குடியுரிமை சட்ட திட்டத்தை உருவாக்கியது. அன்றைய காலகட்டத்தில் தி. மு.க.-பி.ஜே.பி. அரசுடன் கூட்டணி வைத்து அவர்கள் உருவாக்கிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருந்தது. ஆனால் தற்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் மவுனமாக இருந்த தி.மு.க. தற்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பது போல நாடகம் ஆடி வருகிறது. இது சிறுபான்மை மக்களுக்கு செய்த துரோகமாகும். மேலும் வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று பேசினார்.

    முக ஸ்டாலின்

    நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், ரங்கசாமி, எஸ் டி பி ஐ மாநிலத்தலைவர் நெல்லை முபாரக், ஏ. முஜிபுர் ரகுமான், சிறுபான்மையினர் பிரிவு மாநில செயலாளர் துருக்கி எம். ஏ. சி. ரபிக் ராஜா, மாநில அம்மா பேரவை துணைத் தலைவர் ஸ்டார் ரபிக், மாவட்ட செயலாளர் கே. சித்திக் முகம்மது, அம்மா பேரவை மாவட்ட செயலா ளர் எஸ்.எம்.எம். சாகுல் அமீது, பகுதி கழக செயலா ளர்கள் ஈ.பி. பாண்டியன், மாஸ்டர் இரா.ராஜா, டி. வி. நாசர், தலைவா ஸ்ரீதர், மன்னடி எஸ்.எம். ரபிக் மற்றும் மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×