என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  பொன்னேரி அருகே துப்பாக்கி-கஞ்சாவுடன் வாலிபர் கைது- போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொன்னேரி அருகே துப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் பிடிப்பட்ட வாலிபரை கைது செய்த போலீசார் தப்பி ஓடியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  பொன்னேரி:

  பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக பொன்னேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் போலீசார் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வேம்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28) என்பவரது வீட்டில இருந்த 1 கிலோ கஞ்சா மற்றும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

  தப்பி ஓடிய அதே பகுதியைச் சேர்ந்த ஜவகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து பொன்னேரி போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×