என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
  X
  அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

  அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்- ஆசிரியரையும் தாக்கியதால் பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா காலத்தில் வசூல் செய்த பணத்தை பள்ளி நிர்வாகம் திருப்பி தராத காரணத்தால் அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கோவிலூர் ராமநாதபுரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

  கொரோனா ஊரடங்கு காலத்தின் போது மாணவ, மாணவிகள் வீட்டிலிருந்தே இணையதளம் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். அப்போது அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை வசூல் செய்யப்பட்டது. அந்த பணத்தை திருப்பி தரவேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

  ஆனால் பள்ளி நிர்வாகம் பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஆத்திரமடைந்தனர்.

  இன்று திடீரென திண்டுக்கல் - குஜிலியம்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  எரியோடு இன்ஸ்பெக்டர் சத்யபிரபா தலைமையில் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாவட்ட கல்வி அதிகாரிகளும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

  முன்னதாக போராட்டத்தின் போது சில மாணவிகள், ஆசிரியையும் போராட்டத்திற்கு அழைத்தனர். ஆனால் அவர் மறுப்புத்தெரிவித்து சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தார்.

  இதனால் ஆத்திரமடைந்த ஒரு மாணவி ஆசிரியையை தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்தவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
  Next Story
  ×