search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    தமிழகத்திலும் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    டெல்லி, அரியானாவை போல தமிழகத்திலும் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    அரியானாவில் 18 முதல் 59 வயது வரையிலான அனைவருக்கும் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மாநில அரசின் செலவில் இலவசமாக செலுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதே அறிவிப்பை டெல்லி அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலைத் தடுக்க 60 வயதுக்கு உட்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கடந்த 11-ந்தேதி தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்திருந்தேன்.

    60 வயதுக்குட்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படுகிறது; ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழைகளால் இவ்வளவு கட்டணம் செலுத்துவது சாத்தியமல்ல. அதனால் அனைவருக்கும் தமிழக அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×