என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தீயணைப்பு நிலைய வீரர் பாம்பை மீட்ட காட்சி.
  X
  தீயணைப்பு நிலைய வீரர் பாம்பை மீட்ட காட்சி.

  சாத்தான்குளத்தில் வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாத்தான்குளத்தில் ஒரு வீட்டில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
  சாத்தான்குளம்:

  சாத்தான்குளம்  ஜெபஞானபுரம்  தெருவை சேர்ந்தவர்  ஜோதிநாதன் (60).

  இவரது வீட்டில்  திடீரென பாம்பு  ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிநாதன் மற்றும் குடும்பத்தினர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்குதகவல் தெரிவித்தனர்.

  அதன்பேரில்  தீயணைப்பு  நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் சென்று வீட்டின் பிரதான அறையில் பதுங்கியிருந்த பாம்பை நவீன கருவி உதவியுடன் லாவகமாக  பிடித்தனர்.

  பிடிபட்ட பாம்பு 4 அடி நீளம் இருந்தது. விஷத்தன்மை  கொண்டபாம்பை, தீயணைப்பு வீரர்கள்,  சாத்தான்குளம் காட்டு பகுதியில் பாதுகாப்புடன் கொண்டு  விட்டனர்.
  Next Story
  ×