search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
    X
    பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

    திருவேற்காட்டில் கடைகளில் அதிரடி சோதனை- பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

    கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அபராதம் விதிப்பதுடன் கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
    பூந்தமல்லி:

    திருவேற்காட்டில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.ஈ.கே.மூர்த்தி, ஆணையர் ரமேஷ் அறிவுறுத்தலின்பேரில் பஸ் நிலையம், சன்னதி தெரு, அயனம்பாக்கம், நூம்பல், சிவன் கோவில் தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதார துறை ஆய்வாளர் ஆல்பர்ட் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வின்போது 175 கிலோ பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.22 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதேபோன்று கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அபராதம் விதிப்பதுடன் கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாகூர் மீரான் ஒலி, திருவள்ளூர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தூர்பாண்டி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் சம்பத்குமார், நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜுலு மற்றும் நகராட்சி ஊழியர்கள் திருவள்ளூர் பஜார் வீதி, தேரடி, உழவர்சந்தை, சி.வி.நாயுடு, ஜெ.என். சாலை போன்ற பகுதிகளிலுள்ள காய்கறி கடை, மளிகை கடை, டீ கடை, பூக்கடை, ஓட்டல்கள், பேக்கரி, பாஸ்ட்புட் கடை என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கடைகளில் 70 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். ரூ. 7 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் கடைக்காரர்களுக்கு நகராட்சி சார்பில் இலவசமாக மஞ்சப்பை கொடுக்கப்பட்டது.

    Next Story
    ×