search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருங்கைக்காய்
    X
    முருங்கைக்காய்

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: முருங்கைக்காய் கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் முருங்கைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது

    போரூர்:

    கோயம்பேடு மார்கெட்டுக்கு திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து முருங்கைக்காய் தினசரி விற்பனைக்கு வருகிறது.

    கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் முருங்கைக்காய் வரத்து குறைந்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ300 வரை விற்கப்பட்டது. இதையடுத்து விளைச்சல் அதிகம் காரணமாக படிப்படியாக சந்தைக்கு வரத்து அதிகரிக்க தொடங்கியதால் முருங்கைக்காய் விலை குறைய தொடங்கியது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ முருங்கைக்காய் மொத்த விற்பனை கடைகளில் ரூ100க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் முருங்கைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது

    இன்று மொத்த விற்பனை கடைகளில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. சில்லரை கடைகளில் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து காய்கறி மொத்த வியாபாரி விக்கி கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தற்போது 50 டன் அளவுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு குவிந்து வருகிறது. வரத்து அதிகரிப்பு காரணமாகவே முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. எனினும் எதிர்பார்த்த விற்பனை நடப்பது கிடையாது. இதன் காரணமாக தினசரி மூட்டை முட்டையாக முருங்கைக்காய் தேக்கமடைந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×