search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    செல்லப்பம்பட்டி சுயம்பு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

    செல்லப்பம்பட்டி சுயம்பு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது.
    நாமக்கல்:

    செல்லப்பம்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான சுயம்பு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பெரும் தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு திருவிழா கடந்த 6ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து தினசரி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    நாளை(செவ்வாய்க்கிழமை) காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவில் வடிசோறு மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதன்கிழமை இரவு 8 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத் திருத்தேரில் குதிரை வாகனத்தில் சுயம்பு மகாமாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வியாழக்கிழமை மாலை சுவாமிக்கு அலகு குத்துதல், பொங்கல் மற்றும் மாவிளக்கு எடுத்தல் ஆகியவை நடைபெறுகின்றன. அன்று இரவு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அக்னி சட்டி எடுத்து வருதலும், பிற்பகலில் காட்டேரி வேடம் அணிந்து வரும் நிகழ்வும் நடைபெறுகிறது. 

    மேலும் அன்று மாலை வண்டி வேடிக்கை ஊர்வலங்கள் தஞ்சாவூர் கரகாட்டம் போன்ற பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து மே 1ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும் கோவில் நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×