என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
கொடுங்கையூரில் 95 பவுன் நகை கொள்ளையில் ஒருவர் கைது
கொடுங்கையூரில் 95 பவுன் நகை கொள்ளையில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:
கொடுங்கையூர் அபிராமி அவென்யூவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. சந்திரசேகரன். இவரது வீட்டில் கடந்த வாரம் 35 பவுன் நகை கொள்ளை போனது. அதே நாளில் கொடுங்கையூர் ஜான்வாசஸ் தெருவில் உள்ள வெளிநாட்டில் வசித்து வரும் மெர்லின் தாமஸ் என்பவரது வீட்டில் 60 பவுன் நகை திருடு போனது.
இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக மோகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளி ஆவார். இந்த கொள்ளை தொடர்பாக மேலும் ஒருவரை பிடித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story