என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்.
  X
  கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்.

  ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
  ஜோலார்பேட்டை:

  காட்பாடி ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சேலம் உட்கோட்ட சிறப்பு போலீஸ் ஏட்டு சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் அருண் குமார், ஜோதிஸ்வன் ஆகியோர் சிறப்பு தனி படையினர் ஓடும் ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என சோதனை செய்தனர்.

  அப்போது ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் எஸ்வந்த்பூர் வரை செல்லும் எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் விரைவு ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்கும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கும் இடையே சென்று கொண்டு இருந்தது. 

  அதில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணிகளின் உடமைகளை வைக்கும் பகுதியில் கேட்பாரற்று கிடந்த பையில் 5 கிலோ (4 பண்டல்கள்) கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்-தனர்.

  இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×