search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் நகரை தூய்மைப்படுத்தும் பணியை நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தொடங்கி வைத்த போது எடுத்தப்படும்
    X
    திருப்பத்தூர் நகரை தூய்மைப்படுத்தும் பணியை நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தொடங்கி வைத்த போது எடுத்தப்படும்

    திருப்பத்தூர் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி

    திருப்பத்தூரில் நகராட்சித் தலைவர், கவுன்சிலர்கள் துடைப்பம் கொண்டு குப்பைகளை வாரி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகர் முழுவதும் தூய்மைப் படுத்தும் பணியை நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் குப்பைகளை வாரி பெருக்கி சுத்தம் செய்தனர் சமூக வலைத் தளங்களில் பரவியதால் பொது மக்கள் பாராட்டு களை தெரிவித்து வருகின்றனர். 

    திருப்பத்தூர் நகராட்சி 36, வார்டுகளில் உள்ள குப்பைகள் அதிக அளவில் சேருகிறது இதனால் திருப்பத்தூர் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது திருப்பத்தூர் நகர் அழகு கெடுகிறது 

    ஆகையால் அனைத்து பகுதிகளிலும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விவேக், குமார் முன்னிலையில், திருப்பத்தூர் நகராட்சி 250 ஒட்டுமொத்த துப்புரவு தொழிலாளர்கள் கொண்டு தூய்மைப்படுத்தும் பணி நகராட்சி எல்லை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகே இருந்து தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா தலைமை வகித்தார், வாணியம்பாடி மெயின் ரோட்டில் துப்புரவுப் பணியை நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவர் சபியுல்லா, மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் குட்டி என்கின்ற சீனிவாசன், கே.வி. ராஜேந்திரன், டிஎன்டி.கே. சுபாஷ், வெற்றிகொண்டான், சுதாகர், கோபிநாத், உள்ளிட்ட பல்வேறு கவுன்சிலர்கள் துடைப்பம் கொண்டு தெருக்களை சுத்தம் செய்தும் குப்பைகளை வாரி குப்பை வண்டியில் கூட்டி சுத்தம் செய்தனர் 

    இதுகுறித்து நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் கூறியதாவது:-

    திருப்பத்தூர் நகரை அழகுபடுத்தும் முயற்சியில் திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள ஒட்டுமொத்த துப்புரவு பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

    திருப்பத்தூரை தமிழ்நாட்டிலேயே குப்பையில்லா நகரமாக மாற்ற உள்ளோம் திருப்பத் தூரில் பொது இடங்களில் எச்சில் துப்புவது, போன்ற செயல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கலாம் என்றும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது பல்வேறு அரசு பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் அபராதம் விதிக்க நகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்க உள்ளோம். பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறினார். 

    துப்புரவு பணியில் நகராட்சி கவுன்சிலர்கள் ஜீவிதா பார்த்திபன் பரத், அபூபக்கர் மூஜிபூர்குமான், பர்வீன் பேகம் சபீனா ரசாக், செல்வி தில்ஷான்பேகம் சான்பாஷா, உட்பட பலர் கலந்து கொண்டனர். தூய்மைப்படுத்தும் பணி நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×