என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வீடு கட்டும் பணிக்கான ஆணையை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
  X
  வீடு கட்டும் பணிக்கான ஆணையை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.

  கீழப்பாவூர் பேரூராட்சியில் 224 பேருக்கு வீடு கட்டும் ஆணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கீழப்பாவூர் பேரூராட்சியில் 224 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணிக்கான ஆணையை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
  வீ.கே.புதூர்:

  கீழப்பாவூர் பேரூராட்சி சார்பில் 2021-22-ம் ஆண்டுக்கான அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 224 பயனாளிகளுக்கு  பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி கீழப்பாவூர் பேரூராட்சியில் நடைபெற்றது.

  இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான பணி ஆணைகளை வழங்கினார்.

  பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணை தலைவர் ராஜசேகர் மற்றும் செயல் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கீழப்பாவூர் பேரூர் ஜெகதீசன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×