search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் செந்தில் பாலாஜி
    X
    அமைச்சர் செந்தில் பாலாஜி

    அனல் மின் நிலையங்களின் உற்பத்தி அதிகரிப்பு- மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

    மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு மாநில மின் பகிர்தளிப்பு மையம், சென்னை மின் கட்டுபாட்டு மையம் மற்றும் 24 மணி நேர நுகர்வோர் மின் சேவை மையம் மின்னகம் ஆகியவற்றை மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் எஸ். சண்முகம், இயக்குநர்கள், தலைமை பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

    கடந்த 29.03.2022 அன்று உச்சபட்ச மின்நுகர்வோர் 17,196 மெகா வாட் அளவிற்க்கு தேவை ஏற்பட்டது. முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மின்சார வாரியம் எடுத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளின் படி 17,196 மெகா வாட் நுகர்பவு முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டது. 

    கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டு கோடை காலங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு கூடுதலாகத் தேவைப்படுகின்ற 3,000 மெகாவாட் மின்சாரத்திற்கு டெண்டர் முறையில் கொள்முதல் செய்து மின்சாரம் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

    நம்முடைய அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி முழுவதுமாக கிடைக்கப்பெறவில்லை. நமக்கு நாளொன்றுக்கு 72,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால், 47,000 டன் முதல் 50,000 டன் வரை தான் நமக்கு நிலக்கரிகள் வந்து கொண்டியிருக்கிறன. 

    இதுபோல ஒரு நாளைக்கு 22 ரேக் நிலக்கரி கொண்டுவருவதற்கான ஒதுக்கீடு செய்வதற்கு  பதிலாக ஒரு நாளைக்கு 14 ரேக் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

    எனவே, நிலக்கரிகள் இந்தாலும்கூட அதை கொண்டு வருவதற்கான ரேக்குகள்  ஒதுக்கீடுகள் இல்லை என்ற நிலையில், தமிழகத்திற்கு  தேவையான அளவிற்கு நிலக்கரியை மற்றும் ரேக்குகளையும் ஒதுக்கீடு செய்யப்பட்ட வேண்டும் என்று முதலமைச்சர் பிரதமருக்கு கடிதமும் எழுதி உள்ளார்.

    நமக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இல்லாத சூழ்நிலையிலும் கூட மின் உற்பத்தி  அதிகரிக்கப்பட்டுள்ளன. 

    வெளி நாடுகளில் நிலக்கரியின் விலை உயர்வின் காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேவையான நிலக்கரியின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 2 மாதங்களுக்கு மட்டும் கணக்கெடுக்கப்பட்டு 4,80,000 டன் டெண்டர் போடப்பட்டு அதற்கு நான்கு நிறுவனங்கள் பங்கு பெற்று 137 டாலர் அளவிற்கு உறுதி செய்யப்பட்டது.  

    அந்நிறுவனங்களுக்கு  உத்தரவுகள் வழங்கப்பட்டு விரைவில் அந்த நிலக்கரியை நாம் பெற்று உற்பத்திக்கு பயன்படுத்த இருக்கிறோம். இரண்டு தினங்களுக்கு முன்பாக இரவில் ஏற்பட்டு மின் விநியோகத்தின் நிறுத்தம் 796 மெகாவாட்,  மத்திய தொகுப்பிலிருந்து நாம் பெறவில்லை. 
     
    இந்திய முழுவாதும் மின் வெட்டுக்கள் அறிவிக்கபட்ட  காலகட்டங்களில் தமிழகத்தில் மின் வெட்டே இல்லை என்ற நிலையில் சீரன மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த இரண்டு நாட்கள் மத்திய தொகுப்பில் கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் தடை ஏற்பட்டாலும் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன, இன்னும் பல நிறுவணங்கலிருந்து 2 நாட்களுக்குள்ளக கூடுதல் மின்உற்பத்திற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

    2020-2021அஆம் ஆண்டைவிட 2021-2022 ஆம் ஆண்டில் அனல் மின் நிலையங்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. சோலார் உற்பத்தியை பொறுத்தவரை தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. 10 ஆண்டுகளில் தமிகத்தில் 20,000 மெகாவாட் அளவிற்கு  மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×