என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொரோனா தொற்று
  X
  கொரோனா தொற்று

  தமிழகத்தில் இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் மட்டும் புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.
  தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 30க்கும் கீழ் குறைந்தது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகாமல் இருந்தது.

  இந்நிலையில் கொரோனா தொற்று தமிழகத்திலும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 57 ஆக உயர்ந்துள்ளது.

  தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் மட்டும் புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.

  சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 37-ஆக பதிவாகியுள்ளது. நேற்று 21 பேருக்கு கொரோனா தொற்று பதிவான நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது.

  கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 256-ல் இருந்து 286-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 27-ஆக பதிவாகி உள்ளது.

  இதையும் படியுங்கள்..  வயதானாலும் இன்னமும் மாணவராகவே உணர்கிறேன்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
  Next Story
  ×