என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சசிகலா
  X
  சசிகலா

  2வது நாள் விசாரணை நிறைவு- போலீசார் கேட்ட கேள்விகளுக்கு தயக்கமின்றி பதிலளித்த சசிகலா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சசிகலாவிடம் விசாரணை முறையாக நடைபெற்றது, விசாரணையில் காவல்துறையினருக்கு முழு திருப்தி ஏற்பட்டது என்று சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
  சென்னை:

  கொடநாடு கொலை- கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை விசாரணை நடத்தி, சசிகலா அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

  இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் பிற்பகல் 2 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. இன்றைய விசாரணையின் போதும் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சசிகலா பொறுமையாக பதில் அளித்துள்ளார். விசாரணை விவரங்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

  சசிகலாவிடம் விசாரணை முறையாக நடைபெற்றது, விசாரணையில் காவல்துறையினருக்கு முழு திருப்தி ஏற்பட்டது என்றும், கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் எந்தவித தயக்கமும் இன்றி, சசிகலா பதிலளித்துள்ளார் என்றும் அவரது வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். 

  கொடநாடு பங்களாவை புதுப்பிக்கவும், அங்கு செல்லவும் சசிகலாவுக்கு தடை இல்லை என்றும் அவர் கூறினார்.
  Next Story
  ×