என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கோவையில் செல்போன், மோட்டார் சைக்கிள் பறித்த தனியார் நிறுவன ஊழியர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலீசார் மிதுனை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
  கோவை: 

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செப்பாறையை சேர்ந்தவர் தனுஷ்(வயது 23). இவர் கோவை ராமநாதபுரம் ஸ்ரீபதி நகர் 5வது தெருவில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார். 

  நேற்று முன்தினம் இரவு தனுஷ் தனது நண்பர் ஒருவருடன் வீட்டு முற்றத்தில் தூங்கினார்.அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பி தகராறில் ஈடுபட்டனர். 

  பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி அவர்களிடம் இருந்த 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து சென்றனர். 

  இதுகுறித்து தனுஷ் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கத்திமுனையில் செல்போன்கள், பைக் பறித்து சென்றது ராமநாதபுரம் ராமலிங்க ஜோதி நகர் 2வது தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மிதுன்(24) மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் என தெரியவந்தது. போலீசார் மிதுனை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×