என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை படத்தில் காணலாம்.
  X
  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை படத்தில் காணலாம்.

  கடையம் வாகன சோதனையில் 5 வாகனங்கள் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி தென்காசி முதல் ஆழ்வார்குறிச்சி வரை அதிரடியாக வாகன சோதனை மேற்கொண்டார். இதில் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  கடையம்:

  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையரின் உத்தரவின்படி நெல்லை மண்டல துணை போக்குவரத்து ஆணையர் மற்றும் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலரின் அறிவுரையின் படி, மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி , தென்காசி முதல் ஆழ்வார்குறிச்சி வரை அதிரடியாக வாகன சோதனை மேற்கொண்டார்.

  தென்காசி ஆழ்வார்-குறிச்சி சாலையில் வாகன சோதனை செய்ததில் அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனங்களுக்கு அபராதமாக ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

  மேலும் முறையான ஆவணங்கள் இன்றி வந்த இரண்டு சரக்கு வாகனம் , ஒரு ஆட்டோ ரிக்ஷா, இரண்டு லோடு ஆட்டோக்கள் என மொத்தம் 5 வாகனங்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டடது. இதைத்தொடர்ந்து அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடையம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  இந்த சிறப்பு வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெறும் எனவும், அதிக பாரம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி கூறினார்.
  Next Story
  ×