search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைத்தியநாதன் பேட்டை வாய்க்காலில் சிதைந்து போன கரை.
    X
    வைத்தியநாதன் பேட்டை வாய்க்காலில் சிதைந்து போன கரை.

    பாசன வாய்க்காலில் படித்துறைகள் மீண்டும் கட்ட வேண்டும் -கிராம மக்கள் கோரிக்கை

    திருவையாறு அருகே பாசன வாய்க்காலில் படித்துறைகள் மீண்டும் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவையாறு:

    திருவையாறு அருகே வைத்தியநாதன் பேட்டை கிராமத்தில் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஆனந்தக் காவேரி எனும் பாசன வாய்க்கால் உள்ளது. 

    இந்த வாய்க்கால் மூலம் கொள்ளிடத்தின் தென்கரையிலுள்ள வைத்தியநாதன் பேட்டை, புனல்வாசல், விளாங்குடி, அணைக்குடி மற்றும் வீரமாங்குடி ஆகிய கிராமங்-களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலங்களில் விளைவிக்கப்படும் நெல், வாழை மற்றும் கரும்பு ஆகிய விளைபயிர்களுக்கு பாசன நீர் பாய்ந்து அப்பகுதி விவசாயத்திற்கான நீராதார-மாக விளங்குகிறது.

    மேலும், வைத்தியநாதன் பேட்டை உள்ளிட்ட 10 கிராமங்களின் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் நீராடுவதற்கு உகந்ததாகவும் உள்ளது. இதனால், கிராம மக்கள் நீராடுவதற்கும் துணிமணிகள் துவைப்பதற்கும் பயன்படும் வகையில் வாய்க்காலின் இருகரை ஓரங்களிலும் ஆங்காங்கே செங்கல் மற்றும் சிமெண்டினால் ஆன படித்துறைகள் கட்டப்பட்டது.

    தற்போது படித்துறைகள் இடிந்து, வாய்க்காலில் மக்கள் இறங்குவதற்கு ஆபத்தான நிலையில் கரையோரங்கள் சிதைந்து கிடக்கின்றன.

    எனவே கிராம மக்கள் நீராடவும் துணிதுவைக்கவும் உகந்த வகையில் வாய்க்காலின் கரையில் வலுவான படித்துறைகள் கட்டித் தருமாறும், வாய்க்கால் கரையில் மனிதர்கள் நடக்க முடியாத அளவுக்கு மண்டியுள்ள முட்புதர்களை வெட்டி அகற்றி, கரையை சீரமைத்துத் தரவும் சம்மந்தப்பட்ட பொதுப்-பணித்துறை அதிகாரிகளிடம் கிராம மக்களும் சமூக ஆர்வலர்ளும் கோரிக்கை விடுக்கிறார்கள்.
    Next Story
    ×