என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆத்தூரில் வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
  X
  ஆத்தூரில் வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

  வீட்டுமனை பட்டா கேட்டு மனு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்செந்தூர் தாசில்தாரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
  ஆத்தூர்:

  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள ஆத்தூர், சேர்ந்த பூ மங்கலம், குமாரபண்ணையூர், செல்வன் புதியனூர், ஆவரையூர், தலைப்பண்ணை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 200-க்கும் அதிகமான வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத் துணைத் தலைவர் தங்கம் மற்றும் கிராம நகர வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில்,  திருச்செந்தூர் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. 

  நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மகளிரணி ஆழ்வை ஒன்றிய பொதுச் செயலாளர் தெய்வம், மகளிரணி மாவட்ட செயலாளர் மணிமாடத்தி, கிராம நகர வளர்ச்சி பிரிவு ஒன்றிய துணைத் தலைவர் கார்த்திக் நாகராஜ் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×