search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கோயம்பேடு-வடபழனியில் வாட்ஸ் ஆப் குழு அமைத்து கஞ்சா விற்பனை- 5பேர் கைது

    கோயம்பேடு-வடபழனியில் வாட்ஸ் ஆப் குழு அமைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    கோயம்பேடு வரலட்சுமி நகரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியே வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. விசாரணையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது வானகரம் பகுதியை சேர்ந்த அவினாஷ் (26) என்பது தெரியவந்தது. அவர் திரிபுரா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா வரவழைத்து “வாட்ஸ் ஆப்”பில் குழு அமைத்து நூதன முறையில் சென்னை முழுவதும் மோட்டார் சைக்கிளில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவினாஷ் மற்றும் அவரது நண்பர்களான கமல், பிரித்விராஜ், பரத்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் வடபழனி ஒட்டகபாளையம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வேளச்சேரியை சேர்ந்த விக்ரமன் என்பவர் பிடிபட்டார்.
    Next Story
    ×