என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மதுபானம்
  X
  மதுபானம்

  மதுபானங்களின் விலை உயர்வால் ‘பார்’களில் கூட்டம் குறைந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுபானங்கள் விலை அதிகரித்துள்ள நிலையில் மது குடிக்க பார்களுக்கு சென்றால் மேலும் செலவாகும் என்பதால் அங்கு செல்வதை மது பிரியர்கள் தவிர்த்து வருகிறார்கள்.
  சென்னை:

  தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1-ந் தேதி மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. குறைந்த ரகம், உயர்ந்த ரகம் என ரூ 40 முதல் ரூ.150 வரை ஒரு பாட்டிலுக்கு விலை உயர்ந்தது.

  விலை உயர்வால் மதுபானங்கள் விற்பனை குறைந்தது. தற்போது விற்பனை சற்று உயர்ந்து இருந்தாலும் பழைய நிலைக்கு திரும்பவில்லை.

  மதுபானங்களின் விலை உயர்வால் பார்களில் கூட்டம் குறைந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சுமார் 750 பார்கள் உள்ளன.

  மதுபானங்கள் விலை அதிகரித்து உள்ள நிலையில் மது குடிக்க பார்களுக்கு சென்றால் மேலும் செலவாகும் என்பதால் அங்கு செல்வதை மது பிரியர்கள் தவிர்த்து வருகிறார்கள்.

  பார்களில் கிளாஸ், தண்ணீர் மற்றும் சைடிஷ் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மதுபாட்டில் விலை உயர்வால் முன்பைவிட கூடுதல் செலவு ஏற்பட்டு இருக்கும் நிலையில் பார்களுக்கு சென்றால் மேலும் அதிகம் செலவாகும் என்பதால் மதுபானங்களை வாங்கி கொண்டு வீடுகள் அல்லது வேறு எங்காவது சென்று விடுகிறார்கள்.

  இதனால் மதுபானங்கள் விலை உயர்வுக்கு பிறகு பார்களில் கூட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதுகுறித்து பார் உரிமையாளர் சங்க தலைவர் அன்பு கூறியதாவது:-

  ஒரு பாருக்கு தினமும் சராசரியாக 500 பேர் வருவார்கள். மதுபானங்கள் விலை உயர்வுக்கு பிறகு 100 -ல் இருந்து 150 பேர்தான் வருகிறார்கள். தற்போது கோடை காலம் என்பதால் பீர் விற்பனை அதிகமாக இருக்கிறது. பீர் குடிக்க கிளாஸ், தண்ணீர் தேவையில்லை. இதனால் பீர் பாட்டில்களை வாங்கி கொண்டு சென்று விடுகிறார்கள்.

  தற்போது பார்களில் 30 சதவீதம் விற்பனை குறைந்து இருக்கிறது. பார் உரிமைத் தொகையை அரசு 1.8 சதவீதம் வசூலிக்கிறது. கட்டிட வாடகை உள்ளிட்டவற்றால் ஒருபாருக்கு ரூ50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவாகிறது. இதனால் பார்களில் கிளாஸ், தண்ணீர் உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்கவேண்டிய உள்ளன.

  பார்களுக்கான உரிமைத் தொகையை அரசு குறைக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×