search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    X
    பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சத்தியாகிரக பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

    தஞ்சை அருகே சத்தியாகிரக பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி மூதறிஞர் ராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்து நடைபயணமாக வேதாரண்யத்திற்கு சென்று உப்பு எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

    இப்போராட்டத்தை நினைவு கூறும் வகையிலும் இந்தியா சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டுவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டதன் பேரில்,

    உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை திருச்சியிலிருந்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. 

    வலங்கைமான், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக வரும் 30&ந் தேதி  அந்த குழு வேதாரண்யத்தை சென்றடையும். 

    மேற்படி கே.வி.தங்கபாலு தலைமையிலான குழுவினருக்கு கண்டியூரில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    சத்தியாகிரக குழுவினர் கண்டியூரில் இருந்து அம்மன்பேட்டை வழியாக பள்ளியக்ரஹாரம் வந்து தங்கள் பயணத்தை முடித்தனர். 

    பள்ளியக்ரஹாரத்தில் இருந்து பயணத்தை தொடங்கினர். மேற்படி குழுவில் மாநில துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் திருச்சி சரவணன், மாநில பேச்சாளர் குமரி

    மகாதேவன் ஆகியோர் வருகை புரிந்தனர். 

    வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு கோவிந்தராஜூ, மாவட்ட

    ஊடகபிரிவு தலைவர் பிரபுமண்கொண்டார், வட்டாரத்தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, 

    மாநகர மாவட்ட துணைத்தலைவர் செந்தில் நா.பழனிவேல், மாநில பேச்சாளர் பாலகுலோத்துங்கன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர் சசிகலா, மாவட்ட செயலாளர் சுவீதா ஞானப்பிரகாசம்,

    மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரமேஷ்சிங்கம், முன்னாள் சேவாதள மாவட்ட தலைவர் செந்தில்நாதன்,

    முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.ஆர்.சுரேஷ், சோழபுரம் ராஜேந்திரன், மாவட்ட கலை இலக்கிய பிரிவுத்தலைவர் கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×