என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  ஏற்காட்டில் ஆன்லைன் விபசார வழக்கில் 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏற்காட்டில் ஆன்லைன் விபசார வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  ஏற்காடு:

  ஏற்காடு பேருந்து நிலையம் அருகே பிரபல தனியார் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இந்த  விடுதியில் விபசாரம் நடத்-தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

  இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி தையல்நாயகி தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது தங்கும் விடுதி மேலாளர் சேலம் அங்கம்மாள் காலனி பகுதி-யைச் சேர்ந்த சேதுராமன் மகன் நடராஜன் (வயது 65) என்பவர் தலைமையில் ஆன்-லைன் மூலமாக விபசாரம் செய்வது உறுதி செய்யப்-பட்டது. 

  இதனைத் தொடர்ந்து ஏற்காடு மஞ்சகுட்டை பகு-தியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் ரஞ்சித் மற்றும் விபசா-ரத்தில் ஈடுபட்ட கோயம்-புத்-தூர் வேலாண்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் உள்பட 3 பேரிடம் இன்ஸ்பெக்டர் ரஜினி விசாரணை நடத்தி நடராஜன் மற்றும் ரஞ்சித் ஆகியோரை கைது செய்-தனர். இளம்பெண் காப்பகத்-திற்கு அனுப்பி வைக்கப்-பட்டார். 

  இது குறித்து டி.எஸ்.பி தையல் நாயகி கூறுகையில், ஏற்காட்டில் இது போன்ற சட்டத்துக்கு புறம்பான செயலில் ஈடுபடுவோரை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள் இதுபோன்ற குற்ற செயல்-களில் ஈடுபட வேண்டாம். மேலும் தங்கும் விடுதியில் தங்க வருபவர்களின் முழு விவரத்தையும் வாங்கிய பின்பே தங்க வைக்க வேண்டும் என்றார்.

  Next Story
  ×