search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மோட்டார் சைக்கிளை திருடி விற்ற போலீஸ்காரர் கைது- கூட்டாளிகள் 2 பேரும் சிக்கினர்

    சென்னையில் ரெயில் மூலம் கடத்திவரப்பட்டு பிடிபட்ட கஞ்சாவை அதிகாரிகளுக்கு தெரியாமல் பதுக்கி வைத்து விற்றதாக 2 ரெயில்வே போலீஸ்காரர்கள் மற்றும் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் மகன் ஆகியோர் பிடிபட்டனர்.
    சென்னை:

    கஞ்சா வழக்கில் கைதான 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் போலீஸ் நிலையத்தில் பறிமுதல் செய்து வைத்திருந்த மோட்டார் சைக்கிளை போலீஸ்காரர் ஒருவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடி விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலாப்பூர் போலீஸ் நிலைய வளாகத்தில் குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென திருட்டு போனது. அதிக அளவில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் பைக் திருடு போனது போலீசாருக்கு தெரியவில்லை.

    இதற்கிடையே மயிலாப்பூர் ரங்கநாதபுரத்தில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்திவரும் கபிலன் என்பவரிடம் 3 வாலிபர்கள் வந்து தங்களது மோட்டார் சைக்கிளை வாங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த கபிலன் இதுபற்றி மயிலாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து 3 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் போலீஸ்காரரான ஜெயச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்களான நாகராஜ், அருண்பிரகாஷ் என்பதும் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை திருடி விற்க வந்திருப்பதும் தெரிந்தது.

    இதையடுத்து போலீஸ்காரர் ஜெயச்சந்திரன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் போலீஸ்காரர் ஜெயச்சந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒழுங்கு நடவடிக்கையான சஸ்பெண்டு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்த மோட்டார் சைக்கிளை எப்படி திருடி வெளியே கொண்டு வந்தனர்.

    அவர்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்பது குறித்து கைதான 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகளும் தனியாக விசாரித்து வருகிறார்கள். எனவே போலீஸ்காரர் ஜெயச்சந்திரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    போலீஸ் நிலையத்தில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை போலீஸ்காரரே கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடி விற்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×