search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஜய் வசந்த்
    X
    விஜய் வசந்த்

    பா.சிவந்தி ஆதித்தனாரை போற்றி வணங்குகிறேன்- விஜய் வசந்த்

    பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவுநாளில் அவரது நற்சேவைகளை போற்றி வணங்குவதாக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியுள்ளார்.
    கன்னியாகுமரி:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 9-ம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பல்வேறு தரப்பினர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்,  தலைசிறந்த பத்திரிகையாளரும் கல்வி மற்றும் விளையாட்டு துறை மூலமாக இளைஞர்களை ஊக்குவித்த பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து அவரது நற்சேவைகளை போற்றி வணங்குகிறேன் என சமூகவலைத்தளத்தில் கூறியுள்ளார்.
    Next Story
    ×