என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொலை
  X
  கொலை

  தூத்துக்குடியில் குடும்ப பிரச்சினையில் 2½ வயது குழந்தை சுவற்றில் அடித்துக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து செபி தனியாக குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி தாளமுத்துநகரில் உள்ள மேற்கு காமராஜர் தெருவை சேர்ந்தவர் கிஷோர்.

  இவரது மனைவி செபி (வயது28). இவர்களுக்கு கிறிஸ்டினா (5), கேத்ரினா (2½) என்ற மகள்களும் உள்ளனர்.

  கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து செபி தனியாக குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவர் அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

  அப்போது அவருக்கும், தாளமுத்து நகரை சேர்ந்த டேவிட் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக டேவிட்டுடன் ஒன்றாக செபி வாழ்ந்து வந்தார். டேவிட்டுக்கும், செபிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

  நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால் ஆத்திரம் அடைந்த டேவிட், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கேத்ரினாவை தூக்கி சுவற்றில் அடித்துக்கொலை செய்தார்.

  பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×