search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி கருமண்படம் குணமளிக்கும் மாதா ஆலயத்தில் ஈஸ்டர் தின சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    திருச்சி கருமண்படம் குணமளிக்கும் மாதா ஆலயத்தில் ஈஸ்டர் தின சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றபோது எடுத்தபடம்.

    ஈஸ்டர் தினத்தையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    திருச்சியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
    திருச்சி:

    சுமார் 2,000 ஆண்டுக--ளுக்கு முன்பு பாவத்தி-லி-ருந்து மனுக்குலத்தை மீட்டு மன்னித்து ரட்சிக்க வந்த இறை-மகன் இயேசு கிறிஸ்--துவை யூதர்கள் அவர் மீது பொய் குற்றம் சுமத் சிலுவையில் அறைந்து கொன்-றனர். 3 நாட்கள் கல்ல-றையில் வைக்கப்பட்ட அவர் 3&ம் நாள் கல்லறையிலி-ருந்து உயிரோடு எழுந்-தார்.

    இயேசு கிறிஸ்து சிலுவைப்பாடுகள் அனுபவித்து மரித்து உயிரோடு எழுந்த காலத்தை உலகம் முழுவதும் மக்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிப்பார்கள். அதன்பிறகு இயேசு சிலுவையில் அறையபட்ட வெள்ளிக்கிழமையை புனித  வெள்ளியாகவும், அவர் கல்லறையிலிருந்து உயிரோடு எழுந்த நாளான ஞாயிற்றுகிழமையை  ஈஸ்டர் திருநாளாக வும் கடைபிடித்து வருகிறார்கள்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையையொட்டி நள்ளிரவு முதல் திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொணடு இயேசு உயிர்த்தெழுந்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். சிறப்பு  பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

    திருச்சி பாலக்கரை பசிலிக்கா, மேலப்புதூர் தூயமரியன்னை ஆலயம், ஜோசப் சர்ச், புத்தூர் பாத்திமா ஆலயம், கருமண்டபம் மாற்கு ஆலயம், ஆரோக்கிய மாதா ஆலயம், அமலா ஆசிரமம் மற்றும் திருவெறும்பூர், மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி, மணிகண்டம் என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள   தேவாலயங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனையில் கலந்துகொண்டு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.

    பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தது. இயேசு உயிர்த்தெழுந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் உறசாகமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு இனிப்புகள் வழங்கினர். இயேசு உயித்தெழுந்த நேரம் வந்ததும் வானில் வெடி வெடித்து மகிழ்ந்தனர்.

    இயேசு கிறிஸ்து இன்றும் உயிரோடு ஜீவிக்கிறார். அவர் அவரை ஏற்றுக்கொண்டு மனம் திரும்பி வரும் பாவிகள் அனைவரையும்  மன்னித்து புதுவாழ்வு அளிக்க வல்லவராக இருக்கிறார்.

    எனவே இனைவரும் அவரை ஏற்றுக்கொண்டு பாவம் செய்யாமல் , பிறருக்கு உதவி செய்து இயேசு கிறிஸ்து கூறிய தத்துவங்களை கடைபிடித்து வாழவேண்டும் அப்போது இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் பிறப்பார். நமக்கு பல ஆசீர்வாதங்களை தருவார், அற்புதங்களை நடத்துவார் என ஈஸ்டர் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    திருச்சியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.


    Next Story
    ×